Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 26 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வு பெற்று வந்த 8 பேர் வியாழக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க, இரண்டு சகோதரர்கள் உள்ளிட்ட எட்டு பேரை, அவர்களது உறவினர்களுடன் அனுப்பிவைத்தார்.
இந்நிகழ்வில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் கருத்துபகிர்வுகள் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. புனர்வாழ்வு உதவிப் பணிப்பாளர் பிரிகேடியர் தர்சன லியனகே, பூந்தோட்ட புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி, இராணுவ அதிகாரிகள், மதகுருமார், புனர்வாழ்வு பெற்று வரும் போராளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago