2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பூப்பந்து விளையாட்டுத்திடல் திறந்துவைப்பு.

George   / 2017 மார்ச் 04 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா பொதுவைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள பூப்பந்து விளையாட்டுத்திடல், காலை 10.30மணியளவில், வவுனியா பொது வைத்தியசாலைப்பணிப்பாளர் திரு. கு. அகிலேந்திரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் 7 மில்லியன் நிதியுதவியுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட பூப்பந்து விளையாட்டுத்தளத்தை, கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி எஸ். சி. சந்திரகாஷன் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், இலங்கைக்கான ஓபர் நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி சூரியகுமாரி, வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராசா, வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் சுரேந்திரன், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள். ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .