2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

போராட்டத்துக்கு ஆதரவாக EPRLF பேரணி

George   / 2017 மார்ச் 04 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தகு்க ஆதரவாகஈ ஈழ மக்கள் புரட்சி கரவிடுதலை முன்னணி, பேரணியொன்றினை இன்று ஏற்பாடு செய்திருந்தது.

இப்போரணியின் இறுதியில், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மார், தமது உறவுகளை எண்ணி கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சேகத்தில் ஆழ்த்தியிருந்தது.

வவுனியா ரயில் நிலையத்துக்கு முன்பாக இருந்து ஆரம்பமான இப் பேரணி, ரயில் நிலைய வீதி வழியாக, கடை வீதியை அடைந்து, கொரப்பத்தானை வீதிவழியாக,  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கும் இடத்தை அடைந்தது.

சுமார் 300 பேர் வரையில் கலந்துகொண்ட இப்பேரணியில், “எமது பிள்ளைகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய், எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ற உண்மையை சொல்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

போரணியின் இறுதியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் ஆகியோர் உரையாற்றியிருந்ததுடன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஆர். இந்திரராசா, எம். தியாகராசா உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .