2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

போராட்டத்தை பிற்போடுமாறு கோரிக்கை?

Niroshini   / 2017 மார்ச் 05 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

இரணைதீவு மக்களும், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தொடர் போராட்டம் ஒன்றை நடாத்துவதற்குத் தயாராகி வருகின்ற நிலையில், அந்தப்  போராட்டத்தை தாமதப்படுத்துமாறு, மக்களிடம் சில அரசியல்வாதிகள் வேண்டியுள்ளதாக, இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரணைதீவு தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துள்ள கடற்படையினர், அம்மக்களின் மீள்குடியேற்றத்துக்கும், தங்கி நின்று கடற்றொழில் செய்வதற்கும், தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் பூநகரி பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், இரணைதீவில் மீள்குடியேறவும் தங்கி நின்று கடற்றொழில் புரியவும் அனுமதிக்குமாறு, இரணைதீவு மக்கள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கை, இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் இரணைதீவுக்கு நேரடியாகச் செல்வோம் என எடுத்த முடிவு கூட நடைமுறைப்படுத்தவில்லை. அரசாங்கத்தின் செல்வாக்கு உள்ள அரசியல்வாதிகள் இரணைதீவுக்குச் சென்று, மக்களை மீள்குடியேற்றுவோம் என அறிக்கை விட்டனர். அவை கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே, இப்போராட்டத்தைத் தாமதப்படுத்துமாறு, சில அரசியல்வாதிகள் கோரியுள்ளதாக, அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .