2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாரியளவில் கசிப்பு மீட்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 01 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், கே.கண்ணன்
 
கிளிநொச்சி, வெற்றிலைக்கேணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 3 இலட்சம் மில்லிலீற்றர் கோடா மற்றும் 24 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் கசிப்பு விற்பனை மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை  என்பன அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸார் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளோரை கைதுசெய்து வருகின்றனர்.

இதற்கமைய பளைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வெள்ளிக்கிழமை (30) வெற்றிலைக்கேணி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 3 இலட்சம் மில்லிலீற்றர் கோடா மற்றும் 24 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டன.

இதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரையும், விசாரணைகளின் பின்கனர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .