Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2017 ஜனவரி 21 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு கரைதுரைபற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கேப்பாபுலவு புலக்குடியிருப்பு கிராமத்தில் 64 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் காணப்படுவதாகவும் அவற்றில் தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு சொந்த நிலங்களிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி மாதிரிக் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டனர்.
வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து 2012ஆம் ஆண்டு சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுவதாக தெரிவித்து அழைத்து வந்து, மாதிரிக் கிராமம் ஒன்றில் தங்களை மீள்குடியேற்றியதாகவும், எனினும் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது தமது காணிகளில் விமானப்படையினர் நிலைகொண்டிருந்ததாகவும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.
எனினும், விமானப்படையினர் குறித்த பகுதியிலிருந்து விலகி சென்றிருந்த நிலையில் மக்கள் விமானப்படையினரிடம் சென்று காணிகளை விடுவிக்குமாறு கோரிய நிலையில் வனவளப்பாதுகாப்பு பிரிவிடம் கடிதம் ஒன்றை பெற்றுவருமாறு கோரியதாக மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து வியாழக்கிழமை கலந்துரையாடிய நிலையில், காணிகளின் அளவீடு தொடர்பில் தமக்கு தெரியாதுள்ளதாகவும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்தால் தாம் காணிகளை விடுவிப்பதாக வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக மக்கள் குறிப்பிட்டனர்.
மாதிரிக் கிராமத்தில் வாழ்வதால் சுயதேவை பொருளாதாரத்தை கூட செய்யமுடியாத நிலையிலுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை காணிகளை இழந்து பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொந்த இடத்தில் மீள்குடியேற்றுமாறும் அந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
இதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி, நிலஅளவையாளர்கள், மற்றும் வனவளப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் புலக்குடியிருப்புக்குச் சென்று நில அளவைகளை மேற்கொள்ளவுள்ளதாக கரைதுரைப்பற்று பிரதேசசெயலாளர் சிவபாலன் குணபாலன் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago