2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிலக்குடியிருப்பில் குடிநீர் வசதிகள் இல்லையென குற்றச்சாட்டு

Princiya Dixci   / 2017 மார்ச் 06 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கான குடிநீர் வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அங்கு குடியேறிய மக்கள், பல்வேறான சிரமங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். 

குடிநீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஏராளமான பொதுக்கிணறுகள், தனியார் கிணறுகள் இக்கிராமத்தில் உள்ளபோதும் குறித்த கிணறுகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அத்துடன், கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பாவனைக்கு உட்படுத்தாத கிணறுகளாகக் காணப்படுகின்றன. 

இந்நிலையில், இப்பகுதியில் மக்கள் கடந்த 1ஆம் திகதி முதல் மீள்குடியேறிய போதும் உடனடியாக செய்யப்பட வேண்டிய குடிநீர் வசதிகள் எவையும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பிரம்படிக்கிராமத்தில் இருந்தே பெரும் சிரமங்களின் மத்தியில் தமக்கான குடிநீரை கடந்த ஆறு நாட்களாகப் பெற்று வருகின்றனர். 

எனவே, குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருவதற்கு, உரிய தரப்பினர் ஆவன செய்யவேண்டும் என்றும் அம்மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .