Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 23 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு துணுக்காய் பாலங்குளத்தினைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வடமாகாண சபை மேற்கொள்ள வேண்டுமென ஆரோக்கியபுரம் மக்கள், வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் க.கமலேஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாலங்குள புனரமைப்புப் பணிகள் இடம்பெறாமல் இருப்பதன் காரணமாக, இக்குளத்தின் கீழான நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பாலங்குளத்தினைப் புனரமைப்பதாகவும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குளத்தினைப் புனரமைப்பதன் மூலம், குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள தமது கிராமத்தின் கிணறுகளில் நீர் மட்டத்தை பாதுகாக்க முடியும். வரட்சியான காலங்களில் இக்கிராம மக்கள் குளத்துக்கே குளிக்கச் செல்வதாகவும் இவற்றைக் கருத்திற்கொண்டு வடமாகாண சபை ஊடாக குளத்தினைப் புனரமைத்து விவசாய முயற்சிகளுக்கு உதவும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 60 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கையை, குளத்தினைப் புனரமைப்பதன் மூலம் 150 ஏக்கராக அதிகரிக்க முடியும் என கிராம மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago