Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 12 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - பிலவுக்குடியிருப்பில் குடியேறியுள்ள மக்களுக்கு, அடிப்படை வசதிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
சொந்தக் காணிகளில் குடியேற்றுங்கள் என ஒரு மாத காலமாக போராட்டம் நடாத்தி சொந்தக் காணிகளில் குடியேறியுள்ள முல்லைத்தீவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு, அடிப்படை வசதிகள் உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, மாவட்ட செயலாளரிடம் கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நலன்புரி முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, ஒரு மீள்குடியேற்றத்துக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டன. தற்காலிக வீடுகள், மலசல கூடங்கள் அமைக்கப்பட்டன. தற்போது தமது காணிகளில் குடியேறியுள்ள பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு, நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இருப்பினும் பிலவுக்குடியிருப்பு மக்களின் நெருக்கடிகள் தொடர்பாக, அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தி உள்ளோம்” என்றார்.
ஆனால், பிலவுக்குடியிருப்பு மக்கள், மீள்குடியேறிய பின்னர், எவ்வித உதவிகளும் இன்றி, தற்காலிகக் கொட்டகை அமைத்து அதில் தங்கியுள்ளனர். இப்பகுதியில் மீள்குடியேறிய போதும் உடனடியாகச் செய்யப்பட வேண்டிய குடிநீர் வசதிகள் எவையும், இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், இங்கு கடந்த 1ஆம் திகதி முதல் மீள்குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்கள், தமக்கான குடிநீரை, பிரம்படிக்கிராமத்தில் இருந்தே, பெரும் சிரமங்களின் மத்தியில் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago