Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 22 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியிலுள்ள பொலிஸ் காவலரணை பொலிஸ் நிலையமாக தரமுயர்த்துவதற்கு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக சனத்தொகையை கொண்ட பிரதேசமாக காணப்படும் அக்கராயனில், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், பொலிஸ் நிலையம் ஒன்றை அமைக்குமாறு மீள்குடியேறிய மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கைக்கு அமைய, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு, பொலிஸார் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும், இப்பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல்கள், காடழிப்புக்கள், மண் அகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.
இவற்றைத் தடுப்பதற்கும் இனிவரும்காலங்களில் இடம்பெறக்கூடியதான குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், அக்கராயன் பகுதியிலுள்ள பொலிஸ் காவலரணை பொலிஸ் நிலையமாக தரமுயர்த்துமாறு இப்பகுதி பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விடயம் தொடர்பில் கடந்த 18ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அக்கராயன் பொலிஸ் காவலரணை பொலிஸ் நிலையமாக விரைவில் தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளதாக
தலைமைப்பொலிஸ் நிலைய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
3 hours ago