2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மக்களின் போராட்டத்துக்கு வர்த்தக நிலையங்கள் ஆதரவு

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.கண்ணன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களினதும் மற்றும்  புதுக்குடியிருப்பு மக்களினதும் வாழ்வாதரத்துக்குரிய காணிகளை மீட்பதற்காக அந்த பகுதி மக்கள்  நடாத்தி வரும் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மல்லாவி வணிகர் கழகத்தினரின் ஏற்பாட்டில், வர்த்தக   நிலையங்களை மூடி அடையாள கண்டனப் போராட்டம் இன்று நடைபெற்றது.

அத்துடன், ஜனாதிபதிக்கான தமது கோரிக்கை அடங்கிய மகஜரை, துணுக்காய் பிரதேச செயலாளரின் சார்பில், துணுக்காய் பிரதேச செயலக அலுவலக பிரதம நிர்வாக  உத்தியோகத்தர் பானுமதி காந்தரூபனிடம் கையளித்துள்ளனர்.

மல்லாவி வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில், சிகையலங்கரிப்பாளர் சங்கம்,  மல்லாவி மரக்கறி வாணிப சங்கத்தினர், முச்சக்கரவண்டி  உரிமையாளர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உட்பட பெருமளவிலான பொதுமக்களும் இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டு தமது  ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஆதரவு போராட்டம் துணுக்காய் மாங்குளம் பிரதான வீதியில் மல்லாவி நகரப் பகுதியில் உள்ள மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து ஆரம்பித்து பேரணியாக சென்று மல்லாவி பொதுச்சந்தை வளாகத்தில் உள்ள  அதிசயவிநாயகர் ஆலய முன்றலில் கண்டனக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கண்டன பேரணியின் போது, கேப்பாப்புலவு மக்களின் காணிகளை நிபந்தனை  இன்றி விடுதலை செய், நல்லாட்சி அரசே தமிழின  இன  அழிப்பை செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்து, தமிழ்  சிறைக் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய், பொது மக்களின் வாழ்விடங்களுக்கு  அருகில்  உள்ள படை முகாம்களை அகற்று, நல்லாட்சி அரசே  தமிழர்களின் நில அபகரிப்பை உடனே  நிறுத்து, போன்ற பல்வேறு கோசங்களைத் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறு கண்டன பேரணியினர் தமது  போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .