2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மதுபோதையில் மோதல்; ஐவர் வைத்தியசாலையில்

Princiya Dixci   / 2017 ஜனவரி 28 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

மாங்குளம் 06ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், வாள்வீச்சாக மாறியதில் 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த நால்வரே மதுபோதையில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.  

இதனை அவதானித்த வீதியால் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் விலக்குத்தீர்க்க முற்பட்ட வேளை, அவருக்கும் வாள்வெட்டு விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.  

இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மல்லாவி, மாங்குளம் ஆகிய ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  இதில் விலக்கு தீர்க்க வந்தவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்      
 
வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களான கதிவேலு செல்வரட்ணம் (வயது 45) கதிரவேலு சந்திரரட்ணம் (வயது 40) ஆகியோரும் எதிர்த்தரப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான வேலு விக்கினேஸ்வரன் (வயது 32) வேலு ரொமேஸ்வரன் (வயது 37) ஆகியோரும்  சண்டையை விலக்க வந்த, சந்தனம் சந்திரமூர்த்தி (வயது 30) என்பவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .