Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 நவம்பர் 13 , பி.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர்.லெம்பேட்
மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் புதன்கிழமை(13) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து வாகனம் ஒன்றை சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் காணப்பட்டன.
இதன் போது பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது குறித்த உலர் உணவு பொருட்கள் அரசியல் கட்சி ஒன்றினால் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்டமை தெரியவந்தது.
இந்த நிலையில் குறித்த பொருட்களை பொலிஸார் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதோடு,குறித்த வாகனத்தின் சாரதி,உதவியாளர் உள்ளடங்களாக வாகனத்தில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த வாகனத்தில் சுமார் 290 நபர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்ட 5 கிலோ கிராம் அரிசி பக்கட், 2 கிலோ கிராம் மா,1 கிலோ சீனி,20 கிராம் கிராம் ரின்சோ பக்கட் 5 வீதம் தயார் செய்யப்பட்ட கொண்டு வரப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அடம்பன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களையும்,மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
11 minute ago
27 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
40 minute ago
51 minute ago