Editorial / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் உப்பளத்துக்குச் சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து, பெண் ஒருவரின் சடலத்தை, இன்றைய தினம் (13) மதியம் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் - சௌத்பார் ரயில் நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்துக்குச் சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து, இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் பாத்தியில், இன்று காலை சடலம் ஒன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து வந்த மன்னார் பொலிஸார், சடலத்தை பார்வையிட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதன்போது, இன்று மதியம், மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் அப்பகுதிக்கு வந்த நிலையில், குறித்த நீர் நிறைந்த பாத்தியில் இருந்து சடலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தில் பலத்த காயங்கள் காணப்படதுடன், இழுத்து செல்லப்பட்ட அடையாளங்கள், ஆண் ஒருவரி பாதணி உட்பட சில தடையப் பொருட்களையும், சம்பவ இடத்தில் இருந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்படவில்லை.
12 minute ago
50 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
50 minute ago
4 hours ago