Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக அகழ்வு பணிகள், மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறபடுத்தும் பணிகள் என பல்வோறு கட்டமாக செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
தொடர்சியாக சந்தோகத்துக்கு இடமான மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றன. இன்று (12) 69 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இன்று (12) புதன் கிழமை அகழ்வு பணிகளுக்கு அமைவாக தற்போதைய நிலையில் 126 மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மீட்கப்படாத அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணி இடம் பெற்று வருவதாக அறிய முடிகின்றது.
அத்துடன் குறித்த புதை குழி பகுதியானது மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி மூடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .