2025 மே 05, திங்கட்கிழமை

மன்னாரில் மக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள்

Niroshini   / 2021 மே 13 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோன பரவல் காரணமாக, அரசாங்கத்தினால் மாகாண ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தொடர்சியாக மாவட்ட ரீதியில் பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதுடன், வர்த்தக நிலையங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளன.அதேநேரம் மக்கள் பொது போக்குவரத்துக்களை தவிர்த்துள்ளதுடன், அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வருவதை தவிர்த்துள்ளனர்.

மேலும், பொது மக்களின் சுகாதார நடைமுறைகளை அவதானிப்பதற்காகவும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவதானிப்பதற்கும் எனவும் முப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X