2025 மே 05, திங்கட்கிழமை

மன்னாரில் மாபெரும் இரத்ததான முகாம்

Niroshini   / 2021 மே 12 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னாரில், இன்று (12), மாபெரும் இரத்ததான முகாமொன்று நடைபெற்றது.

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இரத்ததானம் செய்யுமாறு மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா, அண்மையில், அவசர கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், மன்னார் றோட்டறிக் கழகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை ஆகியன இணைந்து, மன்னார் தனியார் விடுதியில், இன்றுக் காலை 9.30 மணியளவில், இரத்ததான முகாமொன்றை முன்னெடுத்தன.

இதன்போது இளைஞர், யுவதிகள், தன்னார்வத் தொண்டர்கள் எனப் பலர் கலந்துகொண்டு, இரத்ததானம் செய்தனர்.

இரத்ததானம்  செய்தவர்களை கௌரவிக்கும் வகையில், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X