Niroshini / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தை அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்போடும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த போதும், ஒரு சில நாள்களில் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளதாக, மன்னார் மாவட்ச் செயலாளர்; திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில், கொரோனா தொற்று தொடர்பாக அதிகாரிகளுடன், இன்று (05) காலை 10 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் வைத்து, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதலை கடைப்பிடிப்பதில் இருந்து தவறி உள்ளார்களா என்று சந்தேகம் ஏற்பட்டுள்தாகத் தெரிவித்தார்.
துறை சார் திணைக்கள தலைவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்த அவர், குறிப்பாக மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கூறினார்.
'அதிக எண்ணிக்கையாக பயணிகளை ஏற்றும் பஸ்; சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணித்துள்ளோம்.
'அத்துடன், பொதுமக்கள் அதிகாரிகளுடன் முரண்படுகிற நிலையும் ஏற்படும். எனினும், அதை பொறுத்துக் கொண்டு அதிகாரிகள் செயற்பட வேண்டும்' என்றும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
13 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
3 hours ago