Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 14 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை கிராமத்தில் சட்ட விரோதமான முறையில் 'பனங்கல்லு' விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த மன்னார் மதுவரித்திணைக்கள அலுவலகரை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா கடும் தொனியில் எச்சரித்தார்.
இலுப்பைக்கடவை கிராமத்தில் சட்ட விரோதமான முறையில் பனங்கல்லு விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 5 சந்தேக நபர்கள் கைது செய்த மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகள், குறித்த சந்தேக நபர்களை நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது, மன்னார் மது வரித்திணைக்கள அலுவலகர் ஒருவரும் மன்றில் பிரசன்னமாகி இருந்தார். இதன்போது குறித்த 5 சந்தேக நபர்களும் சட்டவிரோதமான முறையில் இலுப்பைக்கடவை பகுதியில் பனங்கல்லு விற்பனை செய்தார்கள் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.
மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர்,“ குறித்த வழக்கானது மன்னார் மது வரித்திணைக்களத்தினால் மாதம் மாதம் 'கோட்டா' அடிப்படையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் தமது சங்கத்தினால் நபர்கள் தெரிவு செய்யப்பட்டு வழக்கு நடவடிக்கைக்காக மன்னார் மது வரித்திணைக்களத்துக்கு அனுப்பப்படுகின்றது” என மன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா குறித்த 5 சந்தேக நபர்களிடமும் வாக்கு மூலத்தை திறந்த மன்றில் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார்.
மேலும், அப்பாவி சீவல் தொழிலாளர்களை ஏன் இவ்வாறு மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகள் நடத்துகின்றார்கள் என்றும் குறித்த மதுவரித்திணைக்கள அதிகாரிகளை எச்சரித்ததோடு, குறித்த சந்தேக நபர்களிடம் திறந்த நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் மன்னார் மது வரித்திணைக்களத்தில் குறித்த அலுவலகருக்கும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் உத்தியோகஸ்தர்கள் குழுவினர்களுக்கும் எதிராக எவ்விதமான சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து தனக்கு அறிவுறைகளை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் குறித்த வழக்குச்சீட்டுக்களை அனுப்புமாறு கூறியதோடு, மன்றில் ஆஜராகியிருந்த மன்னார் மதுவரித்திணைக்கள அலுவலகரை கடும் தொணியில் நீதவான் எச்சரித்தார்.
மேலும் குறித்த 5 சந்தேக நபர்களையும் தலா ஆயிரம் ரூபாய் பெறுமதியான செந்தப்பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.
குறித்த வழக்கு விசாரனை மீண்டும் எதிர்வரும் யூலை மாதம் 27 ஆம் திகதி விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
47 minute ago
1 hours ago