Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம், இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம் பெற்றது.
விசேட கலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட தலைவர்கள் எல பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் நகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகிய ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராயப்பட்டதோடு எல்லை நிர்ணயங்களின் போது உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
34 minute ago
1 hours ago