Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2015 நவம்பர் 13 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தார்மிக அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு கிழக்கில் அழைப்பு விடுத்த நிலையில் இன்று(13) வெள்ளிக்கிழமை மன்னாரில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் பஸார் பகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தனியார் போக்குவரத்துச் சேவைகள் மன்னார் மாவட்டத்தில் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்ற போதும் மாணவர்கள் சமூகமளிக்கவில்லை. இதனால், பாடசாலைகள் இயங்கவில்லை. எனினும், மன்னார் அரச போக்குவரத்துச் பஸ் சேவைகள் இடம் பெற்று வருவகின்றன.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள ஒரு சில உணவகங்களை தவிர ஏனைய தமிழ், முஸ்ஸிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை எது வித நிபந்தனைகளும் இன்றி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செயய வேண்டும் என்பதனை வழியுறுத்தி குறித்த ஹர்த்தால், வடக்கு - கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
36 minute ago
45 minute ago