Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் சிலாபத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுச் சிறுவனின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து, மன்னார் நீதிமன்ற நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜாவின் அனுமதியுடன், சிறுவனின் சடலத்தை, இன்று (27) மாலை, பொலிஸார் தோண்டி எடுத்துள்ளதோடு, சிறுவனின் தந்தையையும் கைது செய்துள்ளனர்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெற்கேணி கிராமத்திலுள்ள, ஒன்றரை வயதுடைய சஷரூன் கேலம் என்ற சிறுவன் கடந்த, கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை 4 மணியளவில் வீட்டில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குறித்த சிறுவனின் சடலத்தை வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டு செல்லாது, அன்று மாலையே பெற்கேணி முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த விடயத்தை மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு, சிலாபத்துறை பொலிஸார் கொண்டு சென்றதோடு, சடலத்தை தோண்டி எடுக்கவும் அனுமதியையும் கோரினர். இந்நிலையில், நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜாவின் உத்தரவுக்கு அமைவாக, இன்று மாலை குறித்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
மேலும், சிறுவனின் வீட்டுக்கு இன்று மாலை சென்ற நீதவான் ஏ.ஜீ.அ லெக்ஸ்ராஜா விசாரனைகளை மேற்கொண்டார். இதன்போது விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் சென்று தடையங்களை பரிசோதனை செய்தனர்.
சிறுவனின் உடல், பிரேத பரிசோதனைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் தந்தையை சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை, சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago