2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மலையாளபுரம் பகுதியில் கேரள கஞ்சா மீட்பு

எஸ்.என். நிபோஜன்   / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இன்றிரவு ஏழு மணியளவில் சந்தேகத்துக்கிடமான வாகனம் ஒன்று செல்வதை அவதானித்த அவ்வூர் இளைஞர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் பின்தொடர்வதை அவதானித்த அவர்கள் குறுக்கு வீதிகள் ஊடாக வேகமாக பயணித்துள்ளனர். பின்னர் வழி தவறி குளப் பாதை ஒன்றினுள் குறித்த வாகனம் நுழைந்துள்ளது. பின்னர் வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தில் இருந்து நான்கு பொதிகளை எறிந்து விட்டு குள எல்லைக்குள் சென்று அங்கு பாதை முடிவடைந்ததால் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் வீசிய பொதிகளைப் பார்வையிட்டபோது சுமார் ஒரு கிலோகிராம் அளவிலான நான்கு கேரள கஞ்சா பொதிகள் வீசப்பட்டிருந்தன.

இதன்பின்னர் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் சட்டவிரோத மது ஒழிப்புப் பிரிவு விசேட குழுவினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் குறித்த கஞ்சா பொதிகளையும் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .