Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 மே 04 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - மாங்குளம் வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில், அங்கு கொரோனா கொத்தணியொன்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் முறுகண்டி பகுதியைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு, ஏப்ரால் 30ஆம் திகதியன்று, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், , எட்டு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது
இன்னும் 10க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பெறுபேறுகள் கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த வைத்தியசாலை ஊழியர்களின் ஊடாக கொரோனா கொத்தணி ஒன்று உருவாகியுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்வதோடு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago