Editorial / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழுள்ள விவசாயிகளுக்கு, கமநல சேவை நிலையத்தால் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மானிய உரம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி நட்டாங்கண்டல் விவசாயிகளுக்கும், 23ஆம் திகதி அம்பாள்புரம் மற்றும் வன்னிவிளாங்குளம் விவசாயிகளுக்கும் 25ஆம் திகதி பாலைப்பாணி விவசாயிகளுக்கும் 29ஆம் திகதி கண்ணகி மற்றும் மூன்றுமுறிப்பு விவசாயிகளுக்கும் பாண்டியன்குளம் கமநலசேவைல நிலையத்தில் வைத்து மானிய உரம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி வரையும் ஏனைய பிரதேசங்களுக்கான மானிய உரங்கள் பிரதேச உரக் களஞ்சியங்கள் ஊடாகவும் கமநலசேவை நிலையங்கள் ஊடாகவும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago