Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பச்சைப்புல்மோட்டை பகுதியில், போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோகிராம் கிளைமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான வெடிபொருள்கள், நேற்று (27) மீட்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் (26), ஆனந்தபுரம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியைத் துப்புரவு செய்யும் போது, நிலத்தில் புதைந்து காணப்பட்ட தடையபொருள் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு, அப்பகுதியில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நிலத்திற்கள் பாதுகாப்பாக பொதிசெய்யப்பட்ட10 கிலோகிராம் நிறையுடைய கிளைமோர் குண்டு – 1, மிதிவெடிகள் -.109, வெடிமருந்து - 1.5 கிலோகிராம், வெடிபொருளுக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய செயலிழக்கச் செய்ய சிறப்பு அதிரடிப்படையினர் கொண்டு சென்றுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
5 hours ago
7 hours ago