Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 19 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோன கொத்தணியைத் தொடர்ந்து, முடக்கப்பட்டுள்ள பகுதிகள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுத்தலில் இருக்கும் என, முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிமனை பொறுப்பதிகாரி வைத்தியர் மு.உமாசங்கர் தெரிவித்தார்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை கிராமசேவை பிரிவுகளின் கீழ் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும், அவர் கூறினார்.
புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள ஆடைத்தொழில்சாலையில் பணிபுரியும்; 1,500 வரையான பணியாளர்களில், 327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையின் ஊடாக ஆடைத்தொழிற்சாலை கொத்தணி உருவாக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்நிலையில், திங்கட்கிழமை (17) இரவு 11 மணிமுதல் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருபகுதி முழுமையாக முடங்கியுள்ளது.
அத்துடன், முடக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புகள் பலமடங்காக அதிகரித்துள்ளன
இது தொடர்பில், முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிமனை பொறுப்பதிகாரி வைத்தியர் மு.உமாசங்கரிடம் வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவிதத்hர்.
இது தொடரபில் தொடர்ந்துரைத்த அவர், இந்த மூன்று பொலிஸ் பிரிவுகளும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டுமென்று தாங்கள் முன்வைத்த கோரிக்கமையவே, தனிமைப்படுத்தப்பட்டு;ள்ளன என்றார்.
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய கொரோனா தொற்றாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் இனங்காண்பதற்காகவே, இரண்டு வாராங்களுக்கு இப்பகுதிகள் மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்தென்றும், அவர் கூறினார்.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை கிராமசேவைபிரிவுகளின் கீழ் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், இதனை வைத்துக்கொண்டு தான், கிராம சேவையாளர் பிரிவுகளை தனிமைப்படுத்துவதா அல்லது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதாக என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago