Editorial / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்கின்ற வரட்சி காரணமாக குடிநீருக்கு மட்டுமன்றி குளிப்பதற்கும் நீர் நிலைகளைத் தேடி நீண்ட தூரம் மக்கள் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் நீர் முற்றாக வற்றியதன் காரணமாக தமது சிறு குழந்தைகளுடன் நீர் உள்ள இடங்களை நோக்கி பொது மக்கள் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக நீர் உள்ள குளங்களை நோக்கியே பொது மக்கள் செல்கின்றனர்.
புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே கூடுதலாக இந்நிலைமை காணப்படுகின்றது. பிரதேச சபைகள் மூலம் குடிநீரைப் பெற்றுக் கொண்டாலும் குளிப்பதற்கான நீரின்மையால் நீர் நிலைகளைத் தேடி பொதுமக்கள் செல்கின்றனர்.
இதேநேரம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கரைதுறைபற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படுகின்ற பொதுக் கிணறுகளைத் திருத்தம் செய்தும் துப்புரவு செய்தும் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் வழிகளை உருவாக்குமாறு பிரதேச செயலகங்களிடமும் பிரதேச சபைகளிடமும் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago