சண்முகம் தவசீலன் / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (26) இடம்பெற்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இரணைதீவு மக்கள், மன்னார் முள்ளிக்குளம் மக்கள், கொழும்பு, காலி, நீர்கொழும்பு உள்ளிட்ட தென்பகுதி மக்கள், கிழக்கு மாகாண மக்கள் என பல இடங்களிலிருந்தும் ஒன்றுதிரண்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் பொதுச்சந்தைக்கு முன்பாக இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நிறைவடைந்தது.
வடக்கு கிழக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மக்களிடம் வழங்க வேண்டுமெனவும் மக்களிடம் வழங்கப்பட்ட காணிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தே இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago