Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
முள்ளிவாய்க்காலில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியில், கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ளது.
குறித்த காணியை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (22) அளவீடு செய்யப்படும் என காணி நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சுவீகரிப்பை கைவிடுமாறு கோரி பொதுக்கள், காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், வேறு பாதையூடாக, நில அளவையாளர்கள் இராணுவ முகாமுக்குள் சென்றுவிட்டதாகவும் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும், நில அளவீட்டை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்து வட்டுவாகல் பாலத்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், மாவட்டச் செயலர் நேரில் வருகை தந்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனவும் போராட்டத்தில் ஈடுட்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பிரணவநாதன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்து நில அளவையைக் கைவிடுவதாக தெரிவித்தார்.
எனினும் நில அளவையைக் கைவிடுவதாகவும், முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படும் எனவும் எழுத்து மூலமாக தெரிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நில அளவை கைவிடப்படுவதாகவும், எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவித்து, கரைத்துறைப்பற்று பிரதேச செயலரின் கையொப்பத்துடனான கடிதத்தை மேலதிக அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கையளித்தார்.
இதனையடுத்து, போராட்டத்தை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
10 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago
48 minute ago