2025 மே 09, வெள்ளிக்கிழமை

மொழிபெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம்

Niroshini   / 2021 ஜூலை 07 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மனித நேய பல அமைப்புகளின் ஆலோசகரான மன்னார் - பேசாலையைச் சேர்ந்த திருமதி ஏ.இ.றெபேக்கா மிராண்டா, அண்மையில், மன்னார் நீதவான் முன்னிலையில், தமிழ் -ஆங்கில மொழிபெயர்ப்பாளராக, சத்தியப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

இவர் யு.என்.நிறுவனங்களில் 10 வருடங்களுக்கு மேலாகவும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், ஆங்கில ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், இவர், ஆங்கில மொழி மூலம் இளமானி பட்டத்தை வேதியியலிலும், முதுமானி பட்டத்தை மனித அபிவிருத்தித் துறையிலும் முதுகலைப் பட்டத்தை சமூக சேவைகள் துறையிலும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X