2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மோதிவிட்டு தப்பிச் சென்ற டிப்பர்

Freelancer   / 2022 ஏப்ரல் 05 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கர்

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விட்டு, குறித்த இடத்திலிருந்து டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளது.

கிளிநொச்சி - பரந்தன் முல்லைத்தீவு 35 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிசார் கடமையில் இருந்த போதும் NP LN 4676  இலக்கமுடைய குறித்த  டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .