2025 ஜூலை 12, சனிக்கிழமை

முகமாலையில் 5 ஏக்கர் காணி விடுவிப்பு

George   / 2017 ஜனவரி 27 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முகமாலை பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த, 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் 55 ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிர்மல தர்மரட்ண ஆகியோரின் சார்பில், முகமாலை பகுதிக்குரிய கட்டளை தளபதி, கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியசீலனிடம் இதற்கான பத்திரங்களை கையளித்தார்.

குறித்த பகுதி, 2002 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கத்தின் யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பின்னர், யாழ். குடாநாட்டுக்கான நுழைவுப் பகுதியாக முகமாலைப்பகுதி காணப்பட்டது.

அக்காலத்திலிருந்து குறித்த 5 ஏக்கர் நிலப்பகுதி, இராணுவத்தினரின் சோதனை சாவடியாக காணப்பட்டது.
அத்துடன், யுத்த காலத்தில் இரு தரப்பினருக்கும் முன்னரங்க பகுதியாக முகமாலை  காணப்பட்டதால், அங்கு மிதி வெடிகள் அதிகளவில் புதைக்கப்பட்டிருந்தன. இதனால் , இப்பகுதியில் மிதிவெடிகளை அகற்றி கையளிப்பதற்கு தாமதமானமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .