2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முடிவின்றித் தொடரும் போராட்டங்கள்

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்புப் பகுதியில், தங்களது காணிகளை விடுவிக்கக்கோரி, அந்தப்பகுதி மக்கள் மேற்கொண்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம், 13ஆவது நாளாகவும் எந்தத் தீர்வுகளும் கிடைக்காத நிலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில், பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பு இயங்கிய தனியார் காணி மற்றும் அதனைச்சூழவுள்ள 19 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரியும் கேப்பாப்புலவு மக்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப்போராட்டம், 10ஆவது  நாளாகவும் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் அரச தரப்புக்களுடனும் பல பேச்சுக்கள் இடம்பெற்றபோதும், எந்தவித இணக்கப்பாடுகளுமின்றி இப்போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திருகோணமலை, சம்பூர் மக்களும் கேப்பாப்புலவு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .