2025 ஜூலை 12, சனிக்கிழமை

மாணவர்களுக்கு போக்குவரத்துப் பிரச்சினை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி மகா வித்தியாலயத்துக்குச் செல்லும் மாணவர்கள், போக்குவரத்துப் பிரச்சினையை   எதிர்கொண்டுள்ளதாக, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

கௌதாரிமுனை, பரமன்கிராய், பள்ளிக்குடா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், காலை வேளைகளில் பஸ்களில் பாடசாலைகளுக்குச் சென்றாலும், பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது, பஸ்கள் இல்லாமை காரணமாக சிரமத்தை  எதிர்நோக்கி வருவதாக, பெற்றோர் கூறினர்.

குறித்த கிராமங்கள், பாடசாலையிலிருந்து மிகவும் தூரமாக உள்ள நிலையில், பஸ்கள் இல்லாத காரணத்தால் அவர்களது பயணம் பாதிக்கப்படுவதோடு, பெற்றோர் அச்சமடைவதாகவும் அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .