Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 10 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
ஆசிரியர்கள் மூவர் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால், அதிபர் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்ட சம்பவமொன்று, கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்வபம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இச் சம்பவத்தினால் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அதிபருடன் முரண்பட்டு வாயிற் கதவை திறந்துள்னர்.
பாடசாலையின் வழமையான நடவடிக்கைக்கு அமைவாக நாளாந்த வரவு பதிவேட்டில் காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்துக்கு அதிபரினாலோ அல்லது பொறுப்பான ஆசிரியர் ஒருவரினாலோ சிவப்பு கோடு இடப்படுவது வழக்கம்.
இதன் பின்னர் வருகை தரும் ஆசிரியர்கள் குறுகிய விடுமுறை அல்லது விடுமுறையாக கருதப்படுவது வழக்கமான நடவடிக்கையாகும்.
ஆனால், குறித்த அதிபர் அதற்கு புறம்பாக வாயிற் கதவை பூட்டி ஆசிரியர்களை வெளியில் விட்டமையானது அகைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
47 minute ago