2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மைதானத்தை வயலாக்கிய உழவு இயந்திரத்தை மறித்து மக்கள் எதிர்ப்பு

Gavitha   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் பெரியபரந்தன், தாரணிகுடியிருப்பு, வானவில் விளையாட்டு மைதானத்தை உழுத, உழவு இயந்திரத்தை மறித்து, பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

குறித்த காணி, தங்களுடையது என்று இருவா் உரிமை கோரி வருகின்றனா்.இதேவேளை, இந்தக் காணியை, தங்கள் கிராம இளைஞர்களும், முன் பள்ளி சிறாா்களும் 1991ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகின்றனா் என பொது மக்கள் கூறகின்றனர்.

இந்த நிலையில்,  காணி தொடா்பில் உரிமை கோருகின்றவா்களுக்கும் தாரணி குடியிருப்பு மக்களுக்கும் இடையே அடிக்கடி, முரண்பாடுகள் நிலவிவந்துள்ளன.

இந்நிலையில், காணிக்கு உரிமை கோருகின்றவா்களால் உழவு இயந்திரம் மூலம் விளையாட்டு மைதானம் உழவு  செய்யப்பட்டுள்ளது.

இதனை அறிந்த, கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட இளைஞர்கள், உழவு இயந்திரத்தை மறித்து வைத்து,  தங்களின்  எதிர்ப்பை வெளியிட்டதோடு,  உழவு செய்யப்பட்ட பகுதியை மீளவும் வழமைபோன்று சம தரையாக மாற்றியமைத்து தருமாறும், அதுவரை உழவு  இயந்திரத்தை விடுவிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள், சம்பவ இடத்துக்குச் வந்து, சமரசம் செய்து, உழவு இயந்திரத்தை விடுவித்ததோடு, கிராம மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இருவரை பொலிஸ் நிலையம் வருமாறும்  அறிவித்துச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .