Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 16 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய மாந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம், நாளை (18) மாலை, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்த்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய ஆயர் கிங்ஸிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகையினால், திறந்து வைக்கப்படவுள்ளது.
ஒல்லாந்தர்களின் வருகை, சங்கிலிய மன்னனின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வடக்கில் நிலவிய யுத்தம் காரணமாக, மாந்தையில் மடு அன்னை குடிகொண்டிருந்த தேவாலயம் சேதமாகியது. இதனால், மருதமடு அன்னை வேறு இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தார்.
இருப்பினும், யுத்தம் முடிவுற்ற பின்னர், மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகையினால், 2011ஆம் ஆண்டில், மாந்தை மடு அன்னை தேவாலயத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் முழுமையாகப் பூர்த்தியாகியுள்ள நிலையில், நாளைய தினம், தேவாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆயர்கள் மற்றும் குருக்கள் தலைமையில் திருவிழா திருப்பலி, கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago