Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 13 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரம் வழங்கப்படாத அனைவருக்கும் மூன்று மாதத்துக்குள் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுக்கொண்டுள்ள மின்சார விநியோக அமைப்பு நிலையத்துக்கு நேற்று மாலை 5.00 மணியாளவில் விஜயம் செய்த பிரதி அமைச்சர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இதுவரைக்கும் நாம் 120,000 வீடுகளுக்கு மின் இணைப்பை வழங்கியுள்ளோம். இன்றும் நாளையும் வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து இலங்கை மின்சார சபையால் என்ன செய்யப்பட்டுள்ளது, என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து, அதனை நடைமுறைப்படுத்தவுள்ளேன்.
அத்தோடு, இங்கு காற்றாலை மூலம் மின்சாரம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என ஆராய்வதும் இவ்விஜயத்தின் நோக்கமாகும்” என்றார்.
“வடக்கையும் தெற்குப்போல் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம். வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாத நாட்டை கட்டி எழுப்புவதே எமது நோக்கம். காசில்லாதவர்கள் மற்றும் மின்சார இணைப்பை செய்வதற்கு வசதி இல்லாதவர்கள் அனைவருக்கும் நாம் எமது மின்சார சபை ஊழியர்களை அனுப்பி மின்சார இணைப்பை செய்து கொடுப்போம். அவர்கள் பின்பு பணம் கட்டக்கூடியவாறு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்போம்.
அதாவது, வீதியில் உள்ள மின்சாரக்கம்பத்திலிருந்து உங்கள் வீடுவரை மின்வயரை கொண்டு சென்று வீட்டுக்கு மின் இணைப்பை வழங்குவோம். உங்களுக்கு ஆறு வருடங்கள், அதாவது 72 மாதங்களை வழங்குகிறோம். மாதம் 680 ரூபாய் செலுத்த வேண்டும். இது ஒரு மிகக்குறைந்த தொகை. இந்த அதிஸ்டத்தை தவறவிடாமல் மின்சார சபைக்கு சென்று பெற்றுக்கொள்ளுங்கள்” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
53 minute ago
1 hours ago