2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

மானை வேட்டையாடிவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள கல்லாறுக் காட்டுப் பகுதியில் அரியவகை மான் ஒன்றை வேட்டையாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த நபருக்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

தருமபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கல்லாறுக் காட்டுப் பகுதியில் இருந்த அரியவகை மான் ஒன்றை வேட்டையாடி  அதன்  இறைச்சியை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, தருமபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டீ.சதுரங்கவின் உத்தரவுக்கு அமைய சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பெருமளவான மான் இறைச்சியை விற்பனை செய்திருந்த நிலையில் மீதமாக இருந்த 4 கிலோகிராம் மான் இறைச்சியுடன் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சந்தேகநபரை முற்படுத்திய போது, நீதிவான் 7,000 ரூபாய் தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .