2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் வர்த்தக நிலையங்களில் கொள்ளை

Menaka Mookandi   / 2017 ஜனவரி 27 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு நகரிலுள்ள இரு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, அங்கு வைக்கபட்டிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பல்பொருள் அங்காடி மற்றும்  ஆடையகம் என்பவற்றிலே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.  பல்பொருள் அங்காடியில் சுமார் அறுபதினாயிரம் ரூபாய்  பணமும் சிகரெட் வகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை விற்பனை நிலையத்தில் 300 ரூபாய் பணமும் மற்றும் ஆடைகள் பலவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பிலான மேலதி விசாரணைகளை,  முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .