2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முழங்காவில் வைத்தியசாலை வரை பஸ் சேவையை நடத்தும்படி கோரிக்கை

Princiya Dixci   / 2015 நவம்பர் 01 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி முழங்காவில் வைத்தியசாலை வரை பஸ் சேவையை நடத்தும்படி கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் சி.சத்தியசீலனிடம் முழங்காவில் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து முழங்காவில் வரை பயணிக்கும் பஸ்களும் ஏ-32 சாலையில் பயணிக்கும் பஸ்களும் முழங்காவில் மருத்துவமனைப் பகுதிக்கு பயணிக்காததன் காரணமாக 800 மீற்றர் தூரம் வரை நோயாளர்கள் வைத்தியசாலைக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் பூநகரி பிரதேச செயலாளராக இருந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் வரை பயணித்த பஸ்கள், முழங்காவில் வைத்தியசாலை வரை பயணித்ததாகவும் தற்போது வைத்தியசாலை வரை பயணிக்காததன் காரணமாக நோயாளர்கள் மீண்டும் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

எனவே, முழங்காவில் வைத்தியசாலை வரை பஸ்கள் பயணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருமாறு முழங்காவில் மக்கள் மேலதிக மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி மேற்கின் முக்கிய வைத்தியசாலையான அக்கராயன் பிரதேச வைத்தியசாலை வரை பஸ்கள் பயணிப்பதில்லையென்ற தகவலை கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் அக்கராயன் பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .