Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 12 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாஸ்கர்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேழிவனம் கிராமத்தைச் சூழவுள்ள வனப்பகுதிகளுக்கு யானைவேலிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாக காணப்படுகின்ற மேழிவனம் கிராமத்தில் தற்போது 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தொடர்ச்சியாக குறித்த கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை காரணமாக பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாய செய்கைகளும் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் ஊருக்குள் புகுந்த யானை அறுவடை செய்து வீட்டினுள் அடுக்கி வைத்திருந்த நெல் மூடைகளை வீட்டினை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
இவ்வாறு நாளாந்தம் யானைகளின் அச்சுறுத்தலாலால் கிராமத்திலுள்ள சகல குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கிராமத்திற்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக தற்போது யானை வேலிகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
குறித்த கிராமத்தை சூழ 3.5 கிலோ மீட்டர் வரையான பகுதிகளுக்கு முதற்கட்டமாக யானைகள் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago