2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யுத்ததத்தால் மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Gavitha   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்காது மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

கிளிநொச்சி, பூநகரியில் பொன்னாவெளி சைவப்பிரகாச வித்தியாலயம், பல்லவராயன்கட்டு இந்து தமிழ் வித்தியாலயம், கௌதாரிமுனை அ.த.க.பாடசாலை, தம்பிராய் அ.த.க.பாடசாலை, செட்டியகுறிச்சி அ.த.க.பாடசாலை, அத்தாய் முத்துக்குமாரசாமி வித்தியாலயம், கிளிநொச்சி கரைச்சி கோட்டத்தில், குஞ்சுக்குளம் கணேசா வித்தியாலயம் என்பன மூடப்பட்டுள்ள பாடசாலைகளாகும். பூநகரிப் பிரதேச பாடசாலைகள் போர் நடவடிக்கைகள் காரணமாக 1991 முதல் மூடப்பட்டுள்ளன.

குஞ்சுக்குளம் கிராமம், முழுமையாக உவரடைந்ததன் காரணமாக மக்கள் இங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். இதன்காரணமாக இப்பாடசாலை மூடப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள ஏழு பாடசாலைகளையும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .