2025 ஜூலை 12, சனிக்கிழமை

யுத்தத்தால் மூடப்பட்ட பாடசாலையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை

Niroshini   / 2017 ஜனவரி 23 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யுத்தத்தினால் அழிவடைந்து இதுவரை மீள ஆரம்பிக்கப்படாது காணப்படும் கிளிநொச்சி, பூநகரி கௌதாரிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை மீள ஆரம்பிக்குமாறு மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

80 வருடங்களுக்கும் அதிக பழமைவாய்ந்த கௌதாரிமுனை அ.த.க பாடசாலை, கடந்த 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக மூடப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேறி ஏழு ஆண்டுகளாகியும் பாடசாலை இதுவரை மீள ஆரம்பிக்கப்படவில்லை.

 இப்பகுதியில் தற்போது 150 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், இங்குள்ள பாடசாலை மாணவர்கள் அயல் கிராமத்தில் அமைந்துள்ள விநாசியோடை அ.த.க பாடசாலைக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அத்துடன்,  கௌதாரிமுனை கிராமத்துக்கான போக்குவரத்து சேவை  இல்லாத நிலையில் இந்தப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தரம் 10 வரையான வகுப்புக்களை கொண்டு இயங்கிய இந்தப் பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களையாவது மீள ஆரம்பிக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .