2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வசிக்காத வீடுகள் தொடர்பாக விவரங்கள் திரட்டல்

Kogilavani   / 2017 மார்ச் 12 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில், குடும்பங்கள் வசிக்காத வீடுகள் தொடர்பாக விவரங்களை முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் திரட்டி வருகின்றது.

பிரதேச செயலகங்கள் ஊடாக இத்தகவல்கள் திரட்டப்படுகின்றன.

பல குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லாத நிலையில் அமைக்கப்பட்ட வீடுகளில் மக்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகின்றது.

அமைக்கப்பட்ட வீடுகளில் ஆட்கள் இல்லை என்றால், பயனாளிகளை மாற்றுவது அல்லது குடும்பங்களை குடியமருங்கள் என கிராம அலுவலர்கள் மூலம் தகவல்கள் வழங்கப்படுகின்றன.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் மாத்திரம் 15 வரையான நிரந்தர வீடுகளில் குடும்பங்கள் வசிக்கவில்லை என்ற விவரம் கிடைக்கப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .