2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வடக்கில் கல்வியை மேம்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை

Menaka Mookandi   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வியை முன்னேற்றுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிரதமருடைய பணிப்புரைக்கு அமையவே, தான் வட மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டதாகவும் மேற்படி மூன்று மாவட்டங்களின் கல்வி நிலை தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு, உடையார்கட்டு மகா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, முத்துஜயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலயம் ஆகியவற்றின் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை, வியாழக்கிழமை (16) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '1815ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், கண்டிய இராஜ்ஜியத்தில் யுத்தம் நடைபெற்ற பின்னர், தற்பொழுது அங்கு பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது போலவே, முல்லைத்தீவு மாவட்டமும் யுத்தத்தால் பாரிய பாதிப்பை சந்தித்தது. எனவே, இந்த மாவட்டம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கான அழுத்தத்தை தற்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்துக்கு கொடுத்து வருகின்றது' என்றார்.

'கூட்டமைப்பினருடன் இணைந்து, நானும் இந்த மாவட்டத்தின் பொருளாதார கல்வி அபிவிருத்திகளை பெற்றுக்கொள்வதற்கு முழுமையான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு  கொடுப்பேன்' என இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .