Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
இலங்கையின் சுற்றுலாத் தளமாக வடமாகாணத்தை உருவாக்க வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தினர், இத்தகைய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடி வருவதாகக் கூறினர்.
வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இது தொடர்பில் மேற்படி ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.
அங்கு மேற்படி ஒன்றியத்தினர் மேலும் தெரிவிக்கையில், 'சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து அதனை மேம்படுத்துவதனூடாக மாகாணத்தில் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்.
இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வரும் நிலையிலும் யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்துக்கு பல்வேறு நாட்டவர்களும் சுற்றுலா மேற்கொள்ளும் நிலையிலும் வடமகாணத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எனினும், இதற்குப் போதுமான ஒத்துழைப்புக் கிடைக்காமை கவலையளிக்கின்றது. எனவே, இதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேம்.
இங்கு பல ஹோட்டல்கள் இயங்கிவரும் நிலையில், சில ஹோட்டல்கள் சரியான முறையில் பதிவை மேற்கொள்ளாத நிலை காணப்படுகின்றது. எனவே, பதிவை மேற்கொள்ளாத ஹோட்டல்கள்; பதிவு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அவ்வாறு பதிவுள்ள ஹோட்டல்களுக்கு நாம் உதவி வழங்கவும் தயாராக இருக்கின்றோம்.
குறிப்பாக, இங்குள்ள ஹோட்டல்களில் வேலை செய்வதற்கு உரிய ஆளணி வசதி இல்லாத நிலை காணப்படுகின்றது. சுற்றுலாத்துறையில் பயிற்சியை நாம் வழங்குகின்றோம். ஆகவே வேலை வாய்ப்பில்லாமலுள்ளவர்கள் சுற்றுலாத்துறையில் பயிற்சி பெற முன்வர வேண்டும் என்பதுடன், இவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும் என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
59 minute ago
3 hours ago
4 hours ago