2025 ஜூலை 12, சனிக்கிழமை

வடமாகாண ஆளுநரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு

George   / 2017 ஜனவரி 17 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் உள்ள, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து, வடமாகாண ஆளுநரிடம், முன்னாள் போராளிகள் மகஜர் கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொங்கல் விழா, கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வட்டக்கச்சி வயல் பண்ணையில் இன்று இடம்பெற்றது.

இதன்போதே முன்னாள் போராளிகள், ஆளுநரிடம் மகஜர் கையளித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு கோரி, ஆளுநருடன் கலந்துரையாடலிலும்  ஈடுபட்டனர்

இதன்போது, கருத்துத்  தெரிவித்த   வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, குறித்த விடயத்தை  ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுச்  சுமூகமான   தீர்வொன்றைப்   பெற்றுத்தருவதாக கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .