Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு பிரதேசத்தில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக, மூவாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் விநியோகத்திற்கான குடிநீரை பெற்றுக்கொள்வதிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் செல்வி றஞ்சனா நவரத்தினம் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு பிரதேசத்தில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக கூடுதலான இடங்களில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது. இவ்வாறு வரட்சி நிலைமை தொடர்பில் மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் நேற்று (05) கருத்து தெரிவிக்கையில், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள 3 ஆயிரத்து 90 குடும்பங்களுமே பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கூடுதலான இடங்களில் குடிநீர் இல்லாத நிலையில், தற்போது பிரதேச சபையினால் குடிநிர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விநியோகிப்பதற்குரிய குடிநீரை பெற்றுக்கொள்ளும் கிணறுகளிலும், நீர் இல்லாததுடன், குறித்த பிரதேசத்திலுள்ள 40 வரையான பொதுக்கிணறுகளை உடனடியாக ஆழப்படுத்த வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.
மேலும் இவற்றை விட பொதுமக்களின் கிணறுகளை ஆழப்படுத்தித் தருமாறு நாளாந்தம் 25 வரையான கோரிக்கைகள் சமர்ப்பிக்ப்படுவதாகவும், கடந்த 2 வருடங்களாக நிலவும் கடும் வரட்சி காரணமாக, குளங்களின் நீர் வற்றியும் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீட்டுத்தோட்டச்செய்கைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரச் செயற்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
27 minute ago
48 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
48 minute ago
52 minute ago